'அடுத்த 2 நாட்கள்'... 'எங்கெல்லாம் மழை'... 'வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 04, 2019 11:09 PM

அடுத்த இரு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain alert in south districts chennai imd tn next 2 days

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு, தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2, 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு பெரிதாக வாய்ப்பில்லை. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : #RAIN #CHENNAI #ALERT #IMD #TN