‘தமிழகத்தில் காற்று மாசு பாதிப்பு உண்டாகுமா?’... தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 04, 2019 10:48 AM
டெல்லி நகரம் காற்று மாசால் மோசமான நிலையை சந்தித்து வரும் வேளையில், அது தமிழகத்துக்கு பரவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தலைநகர் டெல்லி, கடந்த வாரத்திலிருந்து காற்று மாசு அடைந்ததால் தத்தளித்து வருகிறது. அங்கு காற்றின் தர குறியீடு 500-க்கு மேல் உள்ளது. இதனால் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டநிலையில், செவ்வாய்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் டெல்லி காற்று மாசு, வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகத்தை அரிதாகவே பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தமுறை வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்யாமல், இடைவெளி விட்டிருப்பதால், அடுத்த வாரம் காற்று மாசு ஏற்படும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளார். இது சுமார் காற்றின் தரக் குறியீடு, 200 முதல் 300 வரை இருக்கும் என்பதால், வானம் மங்கலாக இருப்பதைப் பார்த்து யாரும் ஆச்சரியப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். டெல்லி அளவுக்கு காற்று மாசு ஏற்படாது என்பதால், அங்குபோல இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று, குழந்தைகள் எதிர்பார்க்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கிழக்கு மற்றும் வடகிழக்கிலிருந்து காற்று வீசுவதால் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தமிழ்நாட்டை பாதிக்காது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.