சரிபாதியாக 'சரிந்த' விற்பனை.. கொஞ்சநாள் யாரும் 'வேலைக்கு' வரவேணாம்.. 'பிரபல' நிறுவனம் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Manjula | Nov 04, 2019 10:55 PM

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக பிரபல நிறுவனங்கள் பலவும் தொடர்ந்து வேலையில்லா நாட்களை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் அசோக் லேலண்ட் நிறுவனம் மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது.

Ashok Leyland again announced non-working days in November

கடந்த அக்டோபர் மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை 35 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மொத்தம் 9,857 வாகனங்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2018-ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 15,149 வாகனங்களை அசோக் லேலண்ட் விற்பனை செய்திருந்தது. அதனை வைத்து பார்க்கும்போது இந்த ஆண்டில் வாகன விற்பனை 35 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் காரணமாக மீண்டும் அந்நிறுவனம் இந்த நவம்பர் மாதத்தில் 12 வேலையில்லா நாட்களை அறிவித்து உள்ளது. விரைவில் வேலையில்லா நாட்கள் குறித்த முழு தகவலையும் அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : #ASHOKLEYLAND