இந்த ‘மாவட்டங்களில்’ எல்லாம் ‘மழைக்கு’ வாய்ப்பு... ‘சென்னை’ வானிலை ஆய்வு மையம் தகவல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 06, 2020 01:41 PM

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Alert In Seven Districts Of Tamilnadu IMD Chennai

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, விழுப்புரம், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் மழையின் தாக்கம் நாளை முதல் குறைந்து, அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ்  வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #RAIN #CHENNAI #IMD #TN #DISTRICTS #LIST