தமிழகத்தில் மழை நிலவரம்... சென்னை வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 03, 2020 10:30 PM

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai: Rain and Weather Update on TamilNadu

புத்தாண்டு பிறந்தது முதல் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஜனவரி 5-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகப் பகுதியில் வளிமண்டலத்தில் சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சிலப் பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை  31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியல் ஆகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : #RAIN #WEATHER #UPDATE