'நாங்க பார்க்காததா'... 'ஸ்கூட்டி திருட முயன்ற'... இளம் பெண்னின் கெத்தான பதிலால்... அதிர்ந்த சென்னை மக்கள்... சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 04, 2020 11:04 PM

கடந்த புத்தாண்டு அன்று வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியை திருட முயன்றபோது மாட்டிக் கொண்ட இளம் பெண் கூறிய பதிலால் பொதுமக்கள் அதிந்து போயினர். 

Chennai Woman Shocking Confession in Scooty Theft

சென்னை திருவல்லிக்கேணி, தாயார் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் யாசர் அராஃபத் (26). இவர், கடந்த 1-ம் தேதி இரவு வீட்டின் முன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்ற சிறிது நேரத்தில், வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளை டிவியில் பார்த்துள்ளார். அப்போது அந்த தெருவில் வந்த இரு இளம் பெண்களில் ஒருவர் யாசர் அராஃபத் வீட்டிற்கு எதிரே இருட்டில் மறைந்து நின்று நோட்டமிட, மற்றொருவர் பக்கத்து வீட்டு படிக்கட்டில் அமர்ந்துகொண்டார்.

பின்னர், அந்த இளம்பெண், அங்கு நிறுத்தப்பட்டிருந்த யாசார் அராஃபத்தின் ஸ்கூட்டரை கள்ளச்சாவி போட்டு திறக்க முயன்றது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உஷாராகி வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே இறங்கி ஓடி வந்தார். அவரை கண்டதும் அந்த இளம் பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் விரட்டிச்சென்ற போது அதில் ஒரு பெண் மட்டும் சிக்கினார். உடனே அவரை ஒரு வீட்டின் க்ரீல் கேட்டுக்குள் வைத்து பொதுமக்கள் சிறைப்பிடித்து வைத்தனர்.

அப்போது அந்தப் பெண் ‘நான் திருடவில்லை என்றதும், அதற்கு பொதுமக்கள் நீ திருடியதை சிசிடிவி மூலம் பார்த்துவிட்டுதான் உன்னைப் பிடிக்க வந்தோம் என்று கூறினர். அதற்கு அவர் ‘வீடியோல எடுக்காத, யோவ் என்னை ஸ்டேஷன்ல கொண்டு போய் விடு' என்று தைரியமாக எதிர்த்து பேசினார். ‘நாங்க பார்க்காத ஜெயிலே இல்ல’ என்ற ரேஞ்சில் அந்த பெண் கெத்தாக குரல் கொடுக்கவும், திருட முயன்றதற்காக மன்னிப்பு கேட்பார் என்று கருதிய பொதுமக்களுக்கு அவரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் சந்தியா (19) என்பதும், தப்பி ஓடிய தோழியின் பெயர் மோனிஷா (20) என்பதும் தெரியவந்தது. சந்தியா மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும் அவர் மீது கஞ்சா விற்ற வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. சந்தியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் தப்பியோடிய மோனிஷாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags : #CCTV #CHENNAI #WOMAN