என்னை 'பாலியல்' வன்புணர்வு 'செய்துவிட்டார்' மனைவி புகார்... தண்டனையை 'ரத்து' செய்த ஐகோர்ட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 06, 2020 01:36 PM

மனைவி சிறுமியாக இருந்தபோது கணவர் பாலியல் வன்புணர்வு செய்ததாகத் திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றைப் பிறபித்துள்ளது.

Me \'sex\' rape \'done\' a sentence of wife \'cancel\' the court.

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் மனைவி திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில், “சுப்பிரமணியன் என்னை பாலியல் வன்புணர்வு செய்து விட்டார்” என்றும், “பெற்றோர் எங்களுக்குத் திருமணம் செய்து வைத்த பின் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்கிறார்” என்றும் புகார் அளித்திருந்தார்.

இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருப்பத்தூர் மகளிர் காவல் துறையினர் சுப்பிரமணியனைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த மகளிர் நீதிமன்றம் சுப்பிரமணியனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

மகளிர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு விசாரணை நடத்தியது.

விசாரணையின்போது சுப்பிரமணியன் மீது பாலியல் புகார் அளித்திருக்கும் அதே நேரத்தில் அவர் மனைவி, புரிந்துணர்வு விவாகரத்து கோரி கிழ்க்  கோர்ட்டில் விண்ணப்பித்திருப்பது சென்னை நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. அதேபோல், சுப்பிரமணியனும் அவரது மனைவியும் 18 வயதுக்கு பிறகே புரிந்துணர்வோடு உடல் உறவு வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டது.

இதனால், சுப்பிரமணிக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #HIGHCOURT #SEXUALHARASSMENT #FAMILY