'26-ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத் தேர்வு ஒத்திவைப்பு'... 'தமிழக அரசு அறிவிப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 23, 2020 11:43 PM

தமிழகத்தில் 144 தடையுத்தரவை அடுத்து, தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Postponement of class 11 public exam TN Government Announcement

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக்கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு மட்டும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வரும் 24-ம் தேதி மாலை 6 மணிமுதல் 144 தடை உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலை தலைமைச் செயலர் சண்முகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 11-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. 24 அன்று முடியும் 12-ம் வகுப்பு தேர்வு வழக்கம்போல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.