'கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, இன்று மாலை முதலே பேருந்து சேவை நிறுத்தம்!' - ஊரடங்கு உத்தரவு எதிரொலி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தனிமைப்படுத்துதல், நகரங்களை லாக்டவுன் செய்தல், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல் உள்ளிட்ட அம்சங்கள் அரசால் கையாளப்பட்டு வருகிறது.

தற்போதுவரை தமிழகத்தில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், இதனால் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட சேவைகள் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதோடு, லாக்டவுன் எனப்படும் தனிமைப்படுத்துப்படுத்துதல் முறை அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில் ஏதோ பொங்கல், தீபாவளி காலங்களை போல் கோயம்பேட்டில் வெளியூர் செல்வதற்காக பயணிகள் குவிந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன. இவ்வாறு பயணிப்பதால், கொரோனா கட்டுக்குள் வராது என்றும் மாறாக பரவுவதற்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளதாகவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதால் பிற்பகல் 2.30 மணிக்கு மேல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து எந்த பேருந்தும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
