'7ம் வகுப்பு தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வரும் 105 வயது மாணவி!'... '10ம் வகுப்பு தேர்வையும் எழுதப்போவதாக சவால் விடும்... இந்த மூதாட்டி யார்?'... நெகிழ்ச்சி நிறைந்த உண்மை கதை!
முகப்பு > செய்திகள் > இந்தியா105 வயது நிரம்பிய மூதாட்டி, தான் 7-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருவதாகவும் தேர்வில் வெற்றி பெற்றதும் 10-ம் வகுப்பு தேர்வை எழுதுவேன் என்றும் தெரிவித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் முதியோர் திட்டத்தில் வயது முதிர்ந்த மூதாட்டிகள் பலரும் படித்து வருகின்றனர்.
இதில், கொல்லம் பகுதியைச் சேர்ந்த பாகீரதி அம்மா என்ற 105 வயது மூதாட்டி, முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து 4ம் நிலை தேர்வில் வெற்றி பெற்றார். அவர், அடுத்து 7-ம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினார்.
பாகீரதி அம்மா பற்றிய தகவல்களை அறிந்த பிரதமர் நரேந்திரமோடி தனது மன்கிபாத் நிகழ்ச்சியில் பாகீரதி அம்மாவின் தன்னம்பிக்கை, முதிய வயதிலும் கல்வியில் காட்டும் ஆர்வம் பற்றி பாராட்டி பேசினார்.
இந்நிலையில் பாகீரதி அம்மாவிற்கு உலக மகளிர் தினத்தன்று சிறந்த பெண்களுக்கு அளிக்கப்படும் சிறந்த பெண்மணிக்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது.
விருது பெற்ற பாகீரதி அம்மா 7-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறார். அவர், கூறியதாவது:-
7-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறேன். தேர்வில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். வெற்றி பெற்றதும் 10-ம் வகுப்பு தேர்வையும் எழுதுவேன் என்றார்.
