‘முறைகேடுகளை தவிர்க்க’... ‘டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் 6 முக்கிய மாற்றங்கள்’... விபரங்கள் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிஎன்பிஎஸ்சி முறைகேடு சம்பவங்களை அடுத்து, தேர்வு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை செய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் குரூப் 4 பதவிகளுக்கான பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, முறைகேடுகளைக் களையும் நோக்கிலும், தேர்வு மற்றும் திருத்தம் நேர்மையான முறையில் நடந்ததை உறுதி செய்யவும் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 6 மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, தேர்வர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது. தேர்வர்களின் விரல் ரேகையுடன் ஆதார் தகவல்கள் ஒப்பிட்டு பார்த்து மெய்தன்மையை சரிபார்த்த பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். முறைகேடுகளை முன்கூட்டியே தவிர்க்க உயர் தொழில்நுட்ப தீர்வு நடைமுறைப்படுத்தப்படும்.
உரிய கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகல்களை உடனே இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். காலியிடம், கலந்தாய்வு விவரங்கள் இணையத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும். தேர்வர்களின் விவரம் முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது 3 மாவட்டங்களை தேர்வு மைய விருப்பங்களாக தேர்வு செய்யலாம். தேர்வு எழுதும் மையங்களை தேர்வாணையமே இறுதி செய்யும். இந்த நடைமுறைகள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முறை அமலுக்கு வரும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
