தந்தையின் ‘மரணம்’ குறித்து ‘மாலைவரை’ அறியாத ‘மகள்’... ‘தேர்வு’ முடிந்து திரும்பியவருக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 21, 2020 09:07 PM

திருப்பூர் விபத்தில் உயிரிழந்த கண்டக்டரின் மகள் தந்தையின் மரணம் குறித்து எதுவும் தெரியாமல் தேர்வெழுதச் சென்றுள்ளார்.

Tiruppur Accident Girl Wrote Exam Not Knowing Father Is No More

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் கேரள அரசுப் பேருந்தின்மீது லாரி மோதிய விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பேருந்தை இயக்கிய டிரைவர் கிரிஷ், கண்டக்டர் பாஜு  இருவரும் அடங்குவர். இவர்கள் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பயணி ஒருவரைக் காப்பற்றியதற்காக கேரளப் போக்குவரத்துத் துறை நிர்வாக இயக்குநரிடமிருந்து பாராட்டுக் கடிதம் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கண்டக்டர் பாஜூ விபத்தில் உயிரிழந்த தகவல் அவருடைய குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அப்போது அவருடைய மகள் பவிதா 10ஆம் வகுப்பு தேர்வுக்கு கிளம்பிக்கொண்டிருந்ததால், அவரிடம் தந்தையின் மரணம் குறித்து குடும்பத்தினர் எதுவும் கூறமால் இருந்துள்ளனர்.

இதையடுத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து மாலை பள்ளி முடிந்து திரும்பிய பிறகே பவிதாவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியிலிருந்து தோழி ஒருவருடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பவிதா, அங்கிருந்து உறவினர் ஒருவருடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு வைத்தே அவருக்கு தந்தை விபத்தில் உயிரிழந்தது குறித்து கூறப்பட்டுள்ளது. அதைக் கேட்ட பவிதா அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார். தந்தை இறந்தது தெரியாமல் மகள் தேர்வெழுதச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Tags : #ACCIDENT #TIRUPPUR #KSRTC #CONDUCTOR #FATHER #DAUGHTER #EXAM