'குரூப் 4 கலந்தாய்வு தேதி அறிவிப்பு'... கலந்தாய்வில் பங்கேற்க தவறினால்?... 'டி.என்.பி.எஸ்.சி' அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு சர்ச்சையாகிய நிலையில், குரூப் 4 தேர்வில் கலந்துகொண்டவர்களின் பட்டியல் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. அதில், தேர்வில் முறைகேடாக இடம்பிடித்தவர்களின் பெயர்கள் விலக்கப்பட்ட நிலையில் கலந்தாய்விற்கான அறிவிப்பைத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 19ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என்றும் கலந்தாய்வுக்கு வர தவறுவோருக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் டி.என்.பி.எஸ்.சி திட்டவட்டமாக கூறியுள்ளது.
மேலும், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் தற்காலிக பட்டியல் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், குரூப் 4, குரூப் 2ஏ, வி.ஏ.ஓ தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
