'எக்ஸாம் 'டென்ஷன்'லாம் வேண்டாம்... அடிச்சு தூள் கிளப்புங்க!'... தேர்வு பயத்தை போக்க... புதிய அவதாரம் எடுத்த சிபிஎஸ்இ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Feb 21, 2020 01:56 PM

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக சிபிஎஸ்இ, தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறது.

cbse shares memes on exams to reduce pressure among students

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரங்களில் மாணவர்களும் பெற்றோர்களும் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அந்த பதற்றத்தைக் குறைக்கும் வகையில், மத்திய அரசின் கல்வி அமைப்பான சிபிஎஸ்இ, நகைச்சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறது. இவை, சிபிஎஸ்இ-யின் தலைவரான அனிதா கர்வாலின் ஆலோசனையின் பேரில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து அவர் பேசுகையில், "இந்த தலைமுறை மாணவர்களிடம், தேர்வுகள் குறித்த ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் வழங்குவதற்கு பதிலாக, அவர்களிடம் பிரபலமாக உள்ள மீம்ஸ்களின் வாயிலாக சொன்னால் அதிக அளவில் சென்றடையும். அதனால், பதற்றமின்றி மாணவர்களும் பொதுத்தேர்வினை எதிர்கொள்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ-யின் இந்த முயற்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

 

 

 

 

Tags : #EXAM #CLASS12EXAMS #CBSE #STUDENTS