'சாதிக்க துடிக்கும் 'மனம்' வலி அறியாது!'... 'ஆக்சிஜன் சிலிண்டருடன்'... 'பரீட்சை எழுதப் போகும் இந்த சிறுமி யார்?'... மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை கதை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Feb 24, 2020 03:56 PM

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் 10ம் வகுப்பு மாணவி, ஆக்சிஜன் சிலிண்டருடன் தேர்வு எழுத கல்வித்துறை அனுமதி வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

girl from UP writes her 10th public exam with oxygen cylinder

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவி, ஷபியா யாதவ். இவர், அம்மாநிலத்தில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிறந்த மாணவியாக திகழ்ந்த அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்துள்ளது.

அதற்காக சிகிச்சை பெற்று வரும் அவர், செயற்கை முறையின் மூலம் ஆக்சிஜன் டியூப் பொருத்தி சுவாசித்து வருகிறார். இதனால், மாணவி ஷபியாவால் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. இருப்பினும், படிப்பில் ஆர்வம் கொண்ட அவர் தனியாக 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் மாணவி ‌ஷபியா வாழ வேண்டியுள்ளது. எனவே 10-வது வகுப்பு அரசு தேர்வை ஆக்சிஜன் சிலிண்டருடன் தேர்வு மையத்துக்கு சென்று எழுத அனுமதி கேட்டு இருந்தார்.

இதையடுத்து மாணவி ‌ஷபியா ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்று 10-ம் வகுப்பு தேர்வு எழுத உத்தரபிரதேச கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.

இது குறித்து ஷபியாவின் தந்தை பேசுகையில், "எனது மகள் வகுப்பில் முதல் மாணவியாக இருந்தாள். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகிறாள். பள்ளிக்கு செல்ல முடியாததால் தனியாக 10-ம் வகுப்பு படிக்கிறாள். ஆக்சிஜன் உதவியுடன் தான் சுவாசிக்கும் நிலை உள்ளது.

எனது மகள் சிறப்பாக தேர்வு எழுதுவாள். குணமடைந்து வருகிறாள். விரைவில் தானாக சுவாசிக்கும் நிலை ஏற்படும். அவள் சிறப்பாக படித்து நல்ல நிலையை அடைவாள்" என்றார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : #STATEBOARDEXAM #UTTARPRADESH #GIRL #OXYGEN #CYLINDER