‘தள்ளி வைக்கப்படும்’... ‘10, 12- வது சிபிஎஸ்இ, ஜேஇஇ மெயின் தேர்வுகள்’... 'மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Mar 19, 2020 12:31 AM

கொரோனா எதிரொலியாக, சிபிஎஸ்இ பள்ளி தேர்வுகளும் வரும்  31-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

CBSE Board, JEE exams postponed due to coronavirus epidemic

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தாக்கத்தால் பெரும் அச்சத்தில் உள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31-ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளும் வரும் 31-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறி உள்ளது. அதே போன்று, பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. தேர்வுகள் மீண்டும் எப்போது நடத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags : #CBSE #STATEBOARDEXAM #CLASS12EXAMS #EXAM #HRD #MINISTRY #THE CENTRAL BOARD OF SECONDARY EDUCATION