‘10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!’.. கொரோனா எதிரொலியால் தமிழக அரசு அறிவிப்பு!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், மார்ச் 22ஆம் தேதி தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும், ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு 10ஆம் பொதுத்தேர்வுகள் நிகழும் விபரங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த அறிவிப்பினை சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதே சமயம் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறித்துள்ளார்.
