'கல்லூரியில் காதல்'...'ஐயோ என் ஆளு முன்னாடியே அசிங்க படுத்திட்டாரே'... மாணவன் செய்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 17, 2020 10:56 AM

காதலி முன்பு விரிவுரையாளர் அடித்ததால், மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dharmapuri : Student beaten by professor in front of girlfriend, dies

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருேக உள்ள மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் நவீன். கல்லூரி படிப்பை முடித்த இவர் வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே பென்னாகரம் அரசு கலைக்கல்லூரியில் படித்த போது அதே கல்லூரியில் படித்த மாணவி ஒருவரை நவீன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், தனது காதலிக்கு காதலர் தின வாழ்த்து கூறுவதற்காக, கல்லூரிக்கு நவீன் சென்றுள்ளார்.

கல்லூரி வளாகத்திற்குள் சென்ற நவீன், மாணவியுடன் நின்று கொண்டு பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியுடன் பேசி கொண்டிருப்பதை கவனித்த, அந்த கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர் ஒருவர் மாணவியை கண்டித்துள்ளார். அத்துடன் நவீனை தாக்கி அவரது செல்போனை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவமானத்தால் கூறி குறுகி போன நவீன், வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவமானத்தால் மனமுடைந்த நவீன் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள்,  நவீனின் உடலை எடுத்து சென்று பேடரஅள்ளியில் உள்ள கவுரவ விரிவுரையாளர் வீட்டு முன்பு வைத்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது தகராறு முற்றவே அங்கிருந்த சிலர், கவுரவ விரிவுரையாளரின் வீட்டினை அடித்து நொறுக்கினார்கள்.

இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காதலி முன்பு விரிவுரையாளர் தாக்கியதால் மனமுடைந்து இளைஞர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #COLLEGESTUDENT #LOVE #PROFESSOR #GIRLFRIEND #DHARMAPURI