'ஹாலிவுட்' தரத்தில் காதலை வெளிப்படுத்திய 'காதலன்'... இந்த ஆண்டின் 'பிரம்மாண்ட' 'ப்ரபோசல்'... 'பிரமித்து' போன 'காதலி'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 14, 2020 12:33 AM

காதலர் தினமான இன்று வித்தியாசமான அதே நேரத்தில் பிரம்மாண்டமான வகையில் தனது காதலை வெளிப்படுத்தி காதலியை திக்குமுக்காட செய்த நிகழ்வு ஜெர்மனியில் நடைபெற்றுள்ளது.

A lover who expresses his love in a grand way

நமது ஊரில் பெரும்பாலும் காதலிக்கு ஒரு ரோஸ் அல்லது சாக்லேட், கிரீட்டிங்கார்டு என இவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுத்து ப்ரபோஸ் செய்து விடுவார்கள். ஆனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் தங்களது ப்ரபோசல் மிகவும் வித்தியாசமாகவும், தன் காதலி ஏற்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காக, ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். அப்படி, ஜெர்மனைச் சேர்ந்த ஸ்டீபன் ஸ்க்வார்ஸ் என்ற இளைஞர், தன் காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலைச் சொல்ல முடிவு செய்தார்.

தனது மக்காச்சோள வயலில் காட்டுப்பன்றிகள் ஊடுறுவியுள்ளதாகக் கூறி, அவற்றைப் பார்க்குமாறு ட்ரோன் ஒன்றைக் காதலியிடம் கொடுத்துள்ளார். ட்ரோனை பறக்கவிட்ட, ஸ்டீபனின் காதலிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

ட்ரோன் மேலே பறக்க, ஸ்டீபனின் மக்காச்சோள வயலில் 'என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?' என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதைக்  கண்டு பிரமித்துப் போனார். இதையடுத்து ஸ்டீபனின் காதலை ஏற்றுக் கொண்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதனிடையே இந்த காட்சியை கனடாவில் உள்ள ஸ்டான்லியின் அத்தை கூகுள் மேப் வழியாக பார்த்து அந்த புகைப்படத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகுதான் தெரிந்தது இந்த காட்சியை கூகுள் மேப் வழியாக உலகமே பார்த்து வைரலாகியுள்ளது என்பதை.

Tags : #GERMANY #LOVE #EXPRESS #GRAND WAY #GOOGLE MAP