பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் 'ஒரு தலைக் காதல்'... மிகுந்த 'வேதனை' அளிப்பதாக 'விளக்கம்'... 'ஊடகங்கள்' புரிந்து கொள்ளுமாறு 'வேண்டுகோள்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 12, 2020 10:27 AM

பா.ம.க சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தங்கள் கட்சி செய்தியாளர்கள் மீது காதல் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

P.M.K. There is much love for journalists-Explanation of Ramadoss

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அறிக்கையை ராமதாஸ் சென்னையில் வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், செய்தியாளர்கள் மீது பா.ம.க மிகுந்த காதல் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால் எங்களுடைய காதல் எப்போதும் ஒருதலைக் காதலாகவே இருந்து வருகிறது. இதனால் மிகுந்த வேதனைப்படுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊடகங்கள் தங்கள் காதலை புரிந்து கொள்ளாமல், தங்கள் செய்திகளுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதாக குறிப்பிட்ட அவர்,  இந்த காதல் இருதலைக் காதலாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இதனால் செய்தியாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

Tags : #PMK #RAMADOSS #LOVE #JOURNALIST