'பெத்தவங்க சம்மதிக்கல... அதனால'... காதல் விவகாரத்தால்... காவல் நிலையத்தில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 18, 2020 02:48 PM

ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

love marriage couples seek police protection near erode

ஈரோடு மாவட்டம் ஊராட்சிக்கோட்டையைச் சேர்ந்த அர்ச்சுனனும், நகலூரைச் சேர்ந்த அமராவதியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால் திருப்பூர் விநாயகர் கோயிலில் திருமணம் செய்து கொண்ட அவர்கள் பவானி மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பூபாளன், சிந்து பிரியா, ஈரோடு சேனாதிபாளையத்தைச் சேர்ந்த மகேஷ், கார்த்திகா ஆகிய காதல் ஜோடிகளும் பவானி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, மூன்று காதல் ஜோடியின் உறவினர்களுடன் சமரசம் பேசிய காவல்துறையினர், காதலர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் செய்து கொண்டோரின் குடும்பத்தினர், உறவினர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : #LOVE #MARRIAGE #PROTECTION