“என்ன கழட்டிவிட்டு, வேற பொண்ணோட கல்யாணமா?” .. ஒரே ஒரு வாட்ஸ் ஆப் வீடியோதான்.. தெறிக்கவிட்ட இளம் பெண்!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 05, 2020 07:35 PM

தர்மபுரி அருகே உள்ள அரூர் பகுதியில் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் 25 வயதான ராஜேஸ்வரி.

youth marries his girlfriend after her whatsapp video

இவருக்கும் அதே வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் வெங்கடம்பட்டியைச் சேர்ந்த 26 வயதான அருண்குமார் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்ததையடுத்து இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அருண்குமார் ராஜேஸ்வரியிடம் பழகுவதை மெல்லமெல்ல குறைக்க ஆரம்பித்துள்ளார்.

தவிர அருண்குமார் ராஜேஸ்வரியை திருமணம் செய்ய மறுத்ததோடு, அருண்குமாரின் வீட்டில் அவருக்கு வேறு ஒரு இடத்தில் பெண் பார்க்கவும் தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு கொதித்தெழுந்து அரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் சென்று அருண்குமார் மீது புகார் கொடுத்தார்.

இந்த புகாரை அடுத்து ராஜேஸ்வரி தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்யப்போவதாக வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ வெளியிட்டார். அதன் பின் இருவரையும் அழைத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்த, ராஜேஸ்வரியை திருமணம் செய்வதற்கு ஒருவழியாக அருண்குமார் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து தர்மபுரி மகளிர் காவல் நிலையத்துக்கு எதிரே இருக்கும் விநாயகர் கோவிலில் தங்களது உறவினர்கள் முன்னிலையில் அருண்குமார் ராஜேஸ்வரிக்கு தாலிகட்டி திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு மணமக்களை உறவினரும் போலீசாரும் வாழ்த்தினர்.

Tags : #WHATSAPP #MARRIAGE #LOVE