‘மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்ட தந்தை’.. அடுத்து 13 வயது மகனை சுட முயன்றபோது நடந்த பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுன்னாள் ராணுவ வீரார் குடும்ப பிரச்சனையில் மனைவி மற்றும் மகளை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள மித்தலி கிராமத்தை சேர்ந்தவர் சேத்ரம் (41). முன்னாள் ராணுவ வீரரான இவர் தனது 38 வயது மனைவி மற்றும் 17 வயது மகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டு அவரது மனைவியின் வலதுபுறுவத்திலும், மகளின் வயிற்றிலும் பாய்ந்து கீழே விழுந்துள்ளனர்.
இதனை அடுத்து சேத்ரம் தனது 13 வயது மகனை துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். அப்போது தந்தையிடமிருந்து சாதூர்யமாக துப்பாக்கியை பறித்த மகள், உடனே தந்தை மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ராணுவ வீரர் சேத்ரமின் வயிற்றிலும், நெஞ்சிலும் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், படுகாயமடைந்த தாய் மற்றும் மகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சேத்ரமின் மகள், அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை காதலித்ததாகவும், அதற்கு சேத்ரம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மகள் மற்றும் தந்தை இடையே ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்டிருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்திய பின்னரே உண்மை என்னவென தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
