‘டிக்டாக் மூலம் வந்த காதல்’.. கல்யாணத்துக்கு மறுத்த காதலன்.. போலீஸ் கண்முன்னே காதலி எடுத்த விபரீத முடிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 11, 2020 03:51 PM

டிக்டாக் மூலம் பழக்கமான காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் காவல் நிலையத்தில் போலீசார் கண்முன்னே காதலி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TikTok love beautician attempt to suicide in front of police

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜாமுந்திரி பகுதியைச் சேர்ந்தவர் வீரபாபு (20). இவர் ஹதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பெத்தம்மா கோயில் அருகே வாடகை வீடு எடுத்து ஆட்டோ ஓட்டி வருகிறார். ஜூபிலி ஹில்ஸ் அருகே பெல்லிங்மாம்பள்ளியில் உள்ள பியூட்டி பார்லரில் பியூட்டிஷியனாக பணியாற்றி வருபவர் ஷொப்னா (20). கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஷொப்னாவை அடிக்கடி வீரபாபு தனது அறைக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஷொப்னா தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வீரபாபுவிடம் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு வீரபாபு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷொப்னா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இருவரையும் வரவழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் வீரபாபு தன்னிடைய நிலையில் பிடிவாதமாக இருந்துள்ளார். அப்போது ஷொப்னா தான் கையில் வைத்திருந்த ப்ளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் ஆட்டோ டிரைவர் வீரபாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிக்டாக் மூலம் பழக்கமான காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #HYDERABAD #TIKTOK #LOVE #AUTODRIVER