அம்மா உனக்கு 'ரொம்ப' கஷ்டத்தை குடுத்துட்டேன்... புதுப்பெண் தற்கொலையில் 'உருக்கமான' கடிதம் சிக்கியது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 13, 2020 09:14 PM

காதல் திருமணம் செய்துகொண்ட லீசா என்ற புதுப்பெண் சில நாட்களுக்கு சேலத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது கணவர் ராஜ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணம் செய்துகொண்ட 10 மாதங்களில் லீசா இறந்ததால் போலீசார் இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Newly Married Girl Suicide in Salem, Police Investigate

இந்த நிலையில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், ''அம்மா நான் உனக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்துவிட்டேன். என்னால் தான் குடும்ப மானம் போய் விட்டது. தற்போது உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். உடலை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்,'' என எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. அன்னையர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய அம்மாவுக்கு லீசா வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இது தெரியவந்து ராஜ்குமார் அவருடன் சண்டை போட்டு இருக்கிறார்.

இதையடுத்து மனைவியுடன் கோபித்துக்கொண்டு ராஜ்குமார் வெளியே சென்றுவிட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து வெளியே அமர்ந்து விட்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ராஜ்குமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லீசா சொரூப் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : #SALEM #POLICE