‘பிரசவத்தில் உயிரிழந்த தாய்’.. ‘குழந்தையை ரூ.7500 -க்கு விற்ற அக்கா கணவர்’.. அதிர வைத்த காரணம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 13, 2019 06:28 PM

பிரசவத்தின் போது தாய் உயிரிழந்ததை அடுத்து குழந்தையை 7500 ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newborn baby boy was sold for Rs 7500 in Coimbatore

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வி (22). திருமணம் ஆகாதா இப்பெண்ணுக்கு கடந்த 6 -ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக பிரசவத்தின் போது அருள்செல்வி உயிரிழந்துள்ளார். இதனால் அருள்செல்வியின் அக்கா கணவரான ஆனந்தராஜ் என்பவர் ராஜன்-செல்வி என்ற தம்பதிக்கு ரூ.7,500 -க்கு குழந்தையை விற்றதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அந்த தம்பதியினர், அவனாசிப்பாளையத்தில் உள்ள உறவினர் ஒருவரிடம் குழந்தையை வளர்க்க கொடுத்துள்ளனர். தகவலறிந்து அங்கு சென்ற குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள், அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டுள்ளனர். பின்னர் ஆனந்தராஜிடம் நடத்திய விசாரணையில் அருள்செல்வியின் இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாததால் குழந்தையை விற்றதாக கூறியுள்ளார். இந்நிலையில் குழந்தையின் தந்தை யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #NEWBORN #COIMBATORE #SOLD