'2வது முறையும் பெண் குழந்தைய பெக்க வெச்சுட்டியே!'.. கணவரைத் தீர்த்துகட்டிய மனைவி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 23, 2019 06:11 PM

மகாராஷ்ராவின் பால்கர் பகுதியில் 2வது  முறையும், தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த மனைவி, கணவரையே குத்திக் கொலை செய்துவிட்டு, கொலையை தற்கொலையாக மாற்றி நாடகமாட முயன்றுள்ள சம்பவ பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

wife kills husband after giving birth to second girl child

ஆணும், பெண்ணும் சமம் என்கிற புரிதலுக்கு அனைவரும் வந்துவிட்ட நிலையில், தனக்கு இரண்டாம் முறையும் பெண் குழந்தை பிறந்ததால், அதிருப்தி அடைந்துள்ளார் பால்கர் அருகே உள்ள காலா நகரில் வசித்து வந்த 33 வயது பெண்ணான பிரணாலி சுனில் கடம்.

மேலும் இவர், தனக்கு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து தனது கணவரை தொடர்ந்து குற்றம் சாட்டிக்கொண்டே இருந்துள்ளார். ஆனால்,  ஆத்திரம் பொறுக்க முடியாததால், ஒரு கட்டத்தில் தன் கணவரை, கிச்சனில் இருந்த கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர், தனது ஆடைகளை மாற்றியும், ரத்தக்கறைகளை துடைத்தும், கொலையை தற்கொலையாக மாற்ற முயன்றுள்ளார்.

இதனை பிரேத பரிசோதனைக்குப் பிறகு கண்டுபிடித்த போலீஸார், பல்வேறு கொலை, கொலையை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #MAHARASHTRA #WOMAN #MURDER #WIFE #NEWBORN #GIRLCHILD