‘ஓடும் பஸ்ஸில் ப்ளான் போட்டு திருடிய கும்பல்’.. மிரள வைத்த நூதன கொள்ளை சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 29, 2019 10:54 AM

பேருந்தில் சில்லரையை சுண்டுவிட்டி நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

A gang caught for stealing in different way in running bus

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபினவ் என்பவர் நகைப்பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஜூன் மாதம் தன்னிடம் வேலை பார்க்கும் 60 வயதான ரவிச்சந்திரன் என்பவரிடம் சேலத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு வழங்குமாறு நகைகளை கொடுத்து அனுப்பியுள்ளார். அவர் அங்குள்ள நகைக்கடைகளுக்கு கொடுத்துவிட்டதுபோக மீதமிருந்த நகையுடன் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். பீளமேடு அருகே பேருந்து வந்த போது பையில் நகை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா கட்சிகளை போலிசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது நூதன முறையில் ஒரு கும்பல் நகைகளை கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது. அதில் 5 பேர் கொண்ட கும்பல் நகை வைத்திருந்த பெரியவரின் அருகிலும், பின் இருக்கையிலும் அமர்ந்துள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் நாணயத்தை சுண்டி விடுகிறார். உடனே நாணயத்தை தேடுவதுபோல நகையை கொள்ளயடித்து சென்றுள்ளனர்.

இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் மலைச்சாமி, வீரபாண்டி, சீனிவாச பாண்டியன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மலைச்சாமி என்பவர் மீது பல்வேறு மாவட்டங்களில் 25 -க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : #CCTV #POLICE #STEALING #BUS #GANG #COIMBATORE