6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை..! உச்சக்கட்ட பாதுகாப்பில் தமிழகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 23, 2019 12:37 PM

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தமிழக காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Coimbatore on high alert after intel about terrorist intrusion

கடல் வழியாக லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் நுழைந்திருப்பதாக நேற்று தமிழக காவல்துறைக்கு உளவுத்துறையிடம் இருந்து தகவல் வந்துள்ளது. அவர்களிள் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் எனவும் மற்றவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் கோவையில் தங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கோவை முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் விபுதி, பொட்டு வைத்து இந்துகளைப் போல் வேடமணிந்து கோவையில் உலாவி வருவதாக காவல் துறைக்கு உளவுத்துறை அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களான விமான நிலையம், ரயில் நிலையம், கோயில் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : #COIMBATORE #HIGHALERT #TERRORIST #LASHKAR #TAMILNADU #POLICE