‘ரவுடியால் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’... 'கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 23, 2019 08:50 AM

கோவையில் 16 வயது சிறுமி கடத்தப்பட்டு, பிரபல ரவுடியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rowdy arrested for kidnap and sexual harassment to minor

கோவை புலியகுளம் ஏரிமேடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 18-ம் தேதி காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்புதிவுசெய்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அதேப் பகுதியில் அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் 24 வயதான ஜோஸ் என்கிற ஜோஸ்வா, கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.

இவர் மீது 3 கொலை வழக்குகள், வழிப்பறி, அடிதடி உள்பட 27 வழக்குகள் உள்ளன. இதனையடுத்து, அவர் புலியகுளம் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் ஜோஸ்வா தப்பி ஓட முயன்றார். இதில் கீழே விழுந்த அவருக்கு இடது கால் முறிந்து காயம் ஏற்பட்டது.

பின்னர் போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கடந்த 4 நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு, ஆளாக்கப்பட்ட அந்த சிறுமியை மீட்டனர். பிரபல ரவுடியான ஜோஸ்வாவை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #SEXUALHARRASSMENT #COIMBATORE #ROWDY