'1 ரூபாய்க்கு இட்லியா?'.. 'கமலாத்தாள் பாட்டிக்கு உதவிய பிரபல நிறுவனம்'..'பிஹைண்ட்வுட்ஸ் வாசகரின் நெகிழவைத்த கடிதம்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 12, 2019 03:32 PM

கோவை மாவட்டத்தில் உள்ள வடிவேலம் பாளையம் பகுதியைச் சேர்ந்த 85 வயது மதிக்கத்தக்க கமலாத்தாள் பாட்டி, இந்த தள்ளாத வயதிலும், உரலில் மாவாட்டி இட்லி சுட்டு, அந்த இட்லியை எத்தனை கஷ்டம் நஷ்டங்கள் வந்தாலும் 1 ரூபாய்க்குத்தான் விற்பேன் என்று, அதன் விலையையை உயர்த்தாமல், விறகு அடுப்பில் சமைத்து வியாபாரம் செய்து வந்ததை அடுத்து சமூக வலைதளங்களில் பிரபலமானார்.

HPCL and BW reader comes forward to help idly granny

இதனிடையே கோவை மாவட்ட ஆட்சியர், கமலாத்தாள் பாட்டியை அலுவலகத்துக்கு அழைத்து பிரதான் மந்திடி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வழங்கினார். இந்த நிலையில் 30 வருடங்களாக இட்லி சுட்டு விற்று வரும் இந்த பாட்டிக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒரு எல்பிஜி காஸ் சிலிண்டர் கனெக்‌ஷன் மற்றும் ஸ்டவ் அடுப்பினை அளித்துள்ளது. மேலும் இட்லி சுடுவதற்கான ஹாட் பிளேட் ஒன்றும், ஆட்டுக்கல்லை பயன்படுத்தும் இந்த பாட்டிக்கு, வெட் கிரைண்டரும் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா, கமலாத்தாள் பாட்டி குறிந்து அறிந்தவர்கள் தகவல் அளிக்குமாறும், அந்த பாட்டியின் தொழிலுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய தான் விரும்புவதாகவும், அதன்  ஒரு படியாக, கமலாத்தாள் பாட்டிக்கு எல்.பி.ஜி ஸ்டவ் அடுப்பு ஒன்றை வாங்கித் தருவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த செய்தி நமது பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் வெளியானதை அடுத்து, கிவ் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த நமது வாசகரான ரேவதி ஜெயகுமார், கமலாத்தாள் பாட்டிக்கு தன்னுடைய என்ஜிஓ பார்ட்னர்களுடன் இணைந்து, தன்னாலான உதவிகளைச் செய்யவும் முன்வந்துள்ளார். மேலும் பலரும் இணையதளங்கள் மூலம் கமலாத்தாள் பற்றி அறிந்ததும் அவரின் வீடு தேடிச் சென்று உதவி வருகின்றனர்.

Tags : #COIMBATORE #KAMALATHAL #IDLY #HEARTMELTING #HUMANITY