'அப்பா, அம்மாவ ரொம்ப பாசமா'...'பாத்துக்கிட்ட பையன்'... 'எமனாக வந்த தூக்க மாத்திரை '!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 21, 2019 09:41 AM

தூக்கமாத்திரை சாப்பிடுவது தொடர்பாக நடத்த வாக்குவாதத்தில், மகனே தந்தையை அடித்து கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Father and Son argument leads to murder in Coimbatore

கோவை துடியலூர் அடுத்துள்ள சுப்பிரமணியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சென்னை கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கும் இவரது மனைவிக்கும் கடந்த சில வருடங்களாக மனநிலை சரியில்லாமல் போக, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருவரையும் அவரது இரண்டாவது மகன் மோகன் குமார், பாசமாக உடனிருந்து கவனித்து வந்துள்ளார்.

இதனிடையே கோவிந்தராஜுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவருக்கு விரைவில் இருதய அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மகன் மோகன்குமாரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தந்தையிடம் மாத்திரைகளை சாப்பிட வேண்டாம் என மகன் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதனை கேட்காத கோவிந்தராஜ் தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட, கோவிந்தராஜ் தனது மனைவியையும், அதை தடுத்த மகன் மோகன்குமாரையும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் மோகன் குமார் கோபத்தில் அருகிலிருந்த சுத்தியலால், தந்தை கோவிந்தராஜன் தாக்கியுள்ளார்.

இதில் நிலைகுலைந்த கோவிந்தராஜ் மயங்கி விழுந்துள்ளார். ஆத்திரத்தில் தன்னுடைய செயலால் அதிர்ந்து போன மோகன்குமார், தந்தையும், அவரால் லேசான காயம் அடைந்திருந்த தாயையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனால் தந்தை கோவிந்தராஜ் ஏற்கனேவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இதையடுத்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினரிடம் நடந்ததை விவரித்து மோகன்குமார் சரணடைந்தார்.

இந்நிலையில் தனி ஒருவராக மனநலம் பாதிக்கப்பட்ட பெற்றோரை கவனித்து வந்த மோகன் குமார் கடந்த சில மாதங்களாகவே மனஉளைச்சலில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். மேலும் இது கோபத்தில் நடந்த சம்பவமே தவிர, கொலை செய்யும் நோக்குடன் மோகன்குமார் தந்தையை தாக்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

இதனிடையே அப்பா, அம்மா இரண்டு பேரையும் பாசத்துடன் மோகன் குமார் கவனித்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளார்கள். மேலும் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாகவும், அதுவே இந்த சோக முடிவுக்கு காரணமாக அமைந்து விட்டதாக வேதனையுடன் கூறினார்கள்.

Tags : #MURDER #COIMBATORE #FATHER AND SON #MENTAL DISABILITY