‘பொறந்தே ஒரு நாள்தான் ஆகுது’ ‘தொப்புள்கொடி ஈரம்கூட காயல’.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Sep 13, 2019 01:52 PM
பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை வனப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மஞ்சனக்கொரைப் பகுதியைச் சேர்ந்த சகாயமேரி, கீர்த்தி ஆகிய இருவர் நேற்று மாலை ரேஷன் பொருள்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது வனப்பகுதியில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, துணியால் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை குளிரில் நடுக்கிபடி கதறி அழுதுகொண்டு இருந்துள்ளது. இதனைப் பார்த்த அவர்கள் துடித்துப்போய் உடனே குழந்தையை கையில் எடுத்துள்ளனர்.
பின்னர் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு குழந்தையுடன் சென்று நடந்ததைக் கூறியுள்ளனர். இதனை அடுத்து குழந்தை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு குழந்தையை பரிசோத்துப் பார்த்த மருத்துவர்கள், குழந்தை பிறந்து ஒரு நாளே ஆன நிலையில் தொப்புள்கொடி கூட சரியாக அகற்றப்படாமல் இருந்துள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் பசி மற்றும் கடுமையான குளிரினால் குழந்தை நீண்ட நேரமாக அழுதுள்ளது என கூறியுள்ளனர். சிகிச்சை முடிந்த பின்னர் குழந்தை நல அலுவலர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிறந்த குழந்தையை துணியைச் சுற்றி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.