அடேங்கப்பா! ரூபாய் 17.6 லட்சத்திற்கு 'ஏலம்' போன 'லட்டு'.. அப்படி என்ன விசேஷம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Sep 13, 2019 06:13 PM
ஐதராபாத்தை சேர்ந்த பாலாப்பூர் என்ற இடத்தில் ஒவ்வொரு ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்றும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். விழாவின் கடைசி நாளில் லட்டு ஒன்று செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும், வழிபாடு முடிந்ததும் அந்த லட்டு பொதுமக்களுக்கு ஏலம் விடப்படும்.
அதேபோல இந்த ஆண்டும் 21 கிலோ எடையில் லட்டு செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் அந்த லட்டு ஏலத்தில் விடப்பட்டது. இந்த லட்டினை ஏலத்தில் எடுக்க பலரும் போட்டி போட்டனர்.கடும் போட்டிக்கு மத்தியில் தொழிலதிபர் கோலன் ரெட்டி என்பவர் இந்த லட்டை ரூபாய் 17.6 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளார்.
கடந்த 1994-ம் ஆண்டு முதல் இந்த ஏலம் நடைமுறையில் இருப்பதாகவும் முதன்முதலில் ரூபாய் 450-க்கு இந்த லட்டு ஏலம் போனதாகவும் கூறப்படுகிறது.கோலன் ரெட்டி குடும்பம் 9வது முறையாக இந்த லட்டிற்கான ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இவர்களது குடும்பம் கண்டிப்பாக ஏலத்தில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் வரும் வருமானத்தைக் கொண்டு, அப்பகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை விழாக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.