‘நம்பித்தானே வந்தோம்‘... ‘இதையே வேலையாக வைத்திருந்த இளைஞர்’... ’கண்ணீர்விட்ட பெண்கள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 10, 2019 12:17 PM

ஏற்கனவே ஏமாற்றி இரண்டு திருமணங்கள் செய்தநிலையில், மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற இளைஞரை, மனைவிகள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youth who plan for 3rd marriage, wives complaint against him

கோவை மாவட்டம் சூலூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான அரவிந்த தினேஷ். இவர் ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு இவருக்கும், திருப்பூர் கணபதிபாளையத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும், திருமணம் நடந்தது. திருமணமான 15 நாட்களிலேயே, அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதால், பிரியதர்ஷினி தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.

இதையடுத்து தனக்கு திருமணமானதை ஏமாற்றி, திருமண தகவல் மையம் மூலம், கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த அனுப்பிரியா என்பவரை, அரவிந்த தினேஷ், கடந்த ஏப்ரல் மாதம் 2-வதாக திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியை கொடுமைப்படுத்தியது போன்றே, இவரையும் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரும் தாயார் வீட்டிற்குச் சென்று விட்டார். இந்நிலையில், 3-வது திருமணம் செய்வதற்காக அவர், திருமண வலைத்தளத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இதை அறிந்த இரண்டு மனைவிகளும் சேர்ந்து, அவர் பணியாற்றும் அலுவலகத்துக்குச் சென்று, அரவிந்த தினேஷை வெளியே அனுப்பும்படி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு நிர்வாகம், அவரை வெளியே அனுப்ப மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து 2 மனைவிகளும், அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அங்கு வந்த சூலூர் போலீசார், 3 பேரையும் காவல்நிலையத்துக்கு வரும்படி கூறியுள்ளார்.

அப்போது தினேஷ் வெளியே வரும்போது, காத்திருந்த 2 மனைவிகளும், அவர்களது குடும்பமும் சேர்ந்து, அவரை சரமாரியாக தாக்கினர்.  அவர்களிடம் இருந்து தினேஷை மீட்ட போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். நம்பிவந்த தங்களை ஏமாற்றியதாக தெரிவித்த இரண்டு பெண்களும், கண்ணீர் விட்டனர். பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் மூன்றாவது திருமணம் செய்ய முயன்றது குறித்து தினேஷிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MARRIAGE #WEDDING #COIMBATORE #WIVES