வெறும் '500' ரூபாயால் ..பைக் மீது 'பெட்ரோல்' ஊத்தி..இளைஞரின் அதிர்ச்சி செயல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 23, 2019 03:49 PM

போலீசார் 500 ரூபாய் அபராதம் கேட்டதால் பைக் மீது பெட்ரோல் ஊற்றி,இளைஞர் அதனை எரித்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Youth Sets Bike On Fire After Being Issued Challan By Police

மத்திய பிரதேச மாநிலம் இந்தோர் பகுதியில் நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) இளைஞர் ஒருவர் மோட்டார் பைக்கில் வந்திருக்கிறார்.அப்போது அவரைத் தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார் அவரிடம் ரூ.500 அபராதம் கேட்டுள்ளனர்.இதனால் அவர் தனது பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,''அந்த இளைஞர் 1 மணி நேரத்திற்கு மேல் கெஞ்சியும்,போக்குவரத்து போலீசார் அவரை விடவில்லை.எனவே கோபத்தில் அவர் தனது பைக் மீது பெட்ரோல் ஊற்றி அதனை எரித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்,''என தெரிவித்துள்ளனர்.மேலும் போக்குவரத்து போலீசார் தங்களது அடையாளத்தை மறைத்து,வரும் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் பைக்கைக் கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #TRAFFICCOP #TRAFFIC #BIKE