‘மினி லாரியும் பைக்கும்’.. ‘நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில்’.. ‘மாணவர்களுக்கு நடந்த பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 28, 2019 03:35 PM

தூத்துக்குடி அருகே மினி லாரியும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

2 students dead in Mini Lorry Bike accident near Thoothukudi

தூத்துக்குடி சாந்தி நகரைச் சேர்ந்த மணி சங்கர், அஜித் என்ற மாணவர்கள் தங்கள் நண்பர்கள் 4 பேருடன் 3 இரு சக்கர வாகனத்தில் திருவிழாவில் பங்கேற்பதற்காக குலசேகரப்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். அவர்கள் ஆறுமுகநேரி அருகே சென்றுகொண்டிருந்தபோது மணி சங்கர் முன்னால் சென்ற ஆம்னி பேருந்தை முந்த முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக எதிர்த் திசையில் வந்த மினி லாரி ஒன்று இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மணி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் பின்னால் அமர்ந்திருந்த அஜித் படுகாயங்களுடன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #THOOTHUKUDI #MINI #LORRY #BIKE #TWOWHEELER #BUS #OVERTAKE #ACCIDENT #STUDENTS #DEAD #FESTIVAL