தமிழக அரசு ஊழியர்களுக்கு.. தீபாவளி 'போனஸ்' அறிவிப்பு.. விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 15, 2019 09:32 PM

சற்றுமுன் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும்.லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு உபரி தொகையை கணக்கில்கொண்டு 20% போனஸ் தரப்படும்.நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்.

Tamil Nadu Government announced Diwali Bonus, Details Here!

வீட்டு வசதி வாரியம், குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரிய ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்.பிற கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்கப்படும். நிறுவனங்கள் ஒதுக்கும் உபரித்தொகைக்கு ஏற்ப 20% அல்லது 10% போனஸ் வழங்கப்படும்.மின்வாரியம், போக்குவரத்துக் கழகம், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும்.

நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400 அதிகபட்சம் ரூ.16,800 தீபாவளி போனஸ் வழங்கப்படும். போனஸ் வழங்குவதன் மூலம் அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் 3,48,503 பேர் பயன் பெறுவர்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : #DIWALI #BONUS