‘கார் பந்தயத்தின் போது குறுக்கே வந்த பைக்’.. பிரபல கார் ரேஸர் படுகாயம்..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 22, 2019 03:01 PM

கார் பந்தயத்தின் போது குறுக்கே வந்த பைக்கால் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Arjuna awardee Gaurav Gill’s car hits bike on rally route, 3 Killed

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனம், இந்திய தேசிய ரேலி (INRC) என்னும் கார் பந்தயத்தை நடத்துகிறது. மொத்தம் 6 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில் முதல் இரண்டு சுற்றுகள் சென்னை மற்றும் கோவையில் நடைபெற்றது. இதனை அடுத்து 3 -வது சுற்று ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பந்தையத்தில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரபல கார் பந்தய வீரர் கவுரவ் கில் பங்கேற்றார்.

பந்தயத்தில் சுமார் 145 கிலோ மீட்டர் வேகத்தில் அவரது கார் சென்றுகொண்டிருந்தது. எல்லையை அடைவதற்கு 200 மீட்டர் தொலைவிற்கு முன் சிக்கனலை மீறி ஒரு இருசக்கர வாகனம் பந்தைய சாலைக்குள் வந்துள்ளது. வேகமாக வந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் இருசக்கர வாகனம் மீது கார் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நரேந்திரா, அவரது மனைவி புஷ்பா மற்றும் மகன் ஜிதேந்திரா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் கார் பந்தய வீரர் கவுரவ் கில்லும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் பந்தயம் பாதியிலேயே கைவிடப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுரைகளை மீறி பந்தய பாதைக்குள் நுழைந்ததே இந்த விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது. கவுரவ் கில் சமீபத்தில் மத்திய அரசின் அர்ஜூனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ARJUNAAWARD #GAURAVGILL #CARRACE #KILLED #INJURY #BIKE #NATIONALCHAMPIONSHIP #INRC