‘குழந்தையை ஹாஸ்பிட்டலுக்கு’... ‘கூட்டிச் சென்றபோது நேர்ந்த சோகம்’... 'நொடியில் நடந்த கோர விபத்து'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 09, 2019 12:29 PM

சேலம் அருகே, இருசக்கர வாகனம் மீது, மினிடெம்போ மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Accident while taking the child to hospital in bike

நாமக்கல் மாவட்டம் ஆனங்கூரை சேர்ந்தவர் சாந்தகுமார். இவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது 3 வயது மகன் தரணியை, சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் அழைத்து செல்ல நினைத்தார். இதற்காக தனது நண்பர் முருகன் என்பவருடன், இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். சங்ககிரி அடுத்த மேட்டுக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக பின்னால் அதிவேகமாக வந்த மினிடெம்போ ஒன்று திடீரென மோதியது.

மோதிய வேகத்தில், இரு வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 வயது குழந்தையுடன், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அதில் சாந்தகுமார் மற்றும் நண்பர் முருகன் இருவருக்கும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த சங்ககிரி போலீசார், லேசான காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குழந்தையை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மேலும் இருவரது உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு, போலீசார் அனுப்பி வைத்னர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய மினிடெம்போ ஓட்டுநரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #BIKE #CHILD #HOSPITAL