‘மர்ம கும்பலால் இளைஞர் கொடூரக் கொலை’.. ‘பைக்கில் கட்டி 15 கிமீ இழுத்துச் சென்ற பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 25, 2019 03:45 PM

இளைஞரை கொலை செய்த மர்ம நபர்கள் உடலை இருசக்கர வாகனத்தில் கட்டி 15 கிலோ மீட்டருக்கு இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP Youth killed body tied to bike dragged for 15km

உத்தரப்பிரதேசம் ஹாபூர் மாவட்டத்தின் மண்டி பகுதியைச் சேர்ந்தவர் முகுல் (21). இவர் நேற்று காலை உடல் மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சடலத்தில் இடது கால் இல்லாத நிலையில், மற்றொரு கால் சேதமடைந்திருந்துள்ளது.

மர்ம கும்பல் ஒன்று முகுலை கொலை செய்து அவரது உடலை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சாலையில் வழிநெடுகிலும் இருந்த ரத்தக்கரையை வைத்து உடலைக் கண்டுபிடித்துள்ள போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த இருசக்கர வாகனம் குறித்து போலீஸார் விசாரித்தபோது அது இறப்பதற்கு ஒரு நாள் முன்பாக முகுல் அவருடைய நண்பரிடம் வாங்கியது எனத் தெரிய வந்துள்ளது.

மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட முகுலுக்கு யாருடனும் பகை இல்லை என அவருடைய குடும்பத்தினர் கூறியுள்ள நிலையில், நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #UTTARPRADESH #YOUTH #BRUTAL #MURDER #BIKE #15KMS #FOOT #MISSING #GUN #BULLET #POLICE