‘ஏறி இறங்கிய டிராக்டர் சக்கரம்’.. கணவர் கண்முன்னே மனைவி பலியான சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதியதில் கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வீரகநல்லூர் மேட்டு காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி துலுக்காணம்மாள். இருவரும் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி சென்றுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது எதிரே கரும்பை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் அவர்களது இருசக்கர வாகனத்தில் உரசியுள்ளது.
இதனால் நிலைதடுமாறி விழுந்த துலுக்காணம்மாள் மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முருகேசன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் துலுக்காணம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். கணவர் கண்முன்னே டிராக்டர் சக்கரம் ஏறி மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
