'கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானை..' பலமணி நேரம் போராடி, கடைசியில்... பரபரப்பு சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்கண்ட் மாநிலத்தில் குட்டியானை ஒன்று கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா வனப்பகுதியில் இருந்து பான்டோலி என்ற கிராமத்தில் தண்ணீர் தேடி வந்த குட்டியானை ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
நள்ளிரவில் யானையின் அழுகுரலைக் கேட்ட கிராமவாசிகள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து யானையை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பல மணி நேரமாக மீட்பு முயற்சி நீடித்தது. ஒருவழியாக யானையை கயிறு கட்டி கிணற்றில் இருந்து வெளியே எடுத்த வனத்துறையினர் அதை காட்டுக்குள் கொண்டு போய் விட்டனர்.
Tags : #BABYELEPHANT
