‘அப்பாவிடம் தகராறு செய்த வேன் டிரைவர்’.. ஆத்திரத்தில் மகன் செய்த அதிர்ச்சி காரியம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 14, 2020 06:05 PM

நாகர்கோவில் அருகே அப்பாவிடம் தகராறு செய்த வேன் டிரைவரை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nagercoil man murdered van driver police investigate

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த குருசடி பகுதியை சேர்ந்தவர் வேன் டிரைவர் அஜி (30). அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றின் திருவிழா நடத்துவது குறித்து ஊர்கூட்டம் நடந்துள்ளது. அப்போது உறவினர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அது தகராறில் முடிந்துள்ளது. அந்த சமயம் அஜி தனது உறவினரான அன்பு என்பருடன் தகராறு செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனை ஒன்றில் அன்புவை அஜி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த தகராறு குறித்து அன்புவின் மகன் அரவிந்த் (23) என்பவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது சித்தப்பா மகன் திலக் என்பவருடன் பைக்கில் சென்றுள்ளனர். சாலையோரம் நின்றுகொண்டிருந்த அஜி இவர்கள் வருவதை அறிந்த தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனாலும் அவர்கள் ஒரு கட்டையால் அஜியின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அஜி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அஜி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அஜியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளில் அடிப்படையில் தலைமறைவாக உள்ள அன்பு மற்றும் அவரது உறவினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தந்தையிடம் தகராறு செய்ததற்காக வேன் டிரைவரை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #NAGERCOIL