'மனைவியை' கொன்று... இறந்த பின்னரும் 'கணவன்' செய்த கொடுமை... 'அதிர்ச்சியில்' உறைந்து போன மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Feb 14, 2020 01:23 PM

மனைவியை கொன்றது மட்டுமின்றி அவரது தோலையும் கணவன் தனியாக உரித்தெடுத்த சம்பவம் தீராத அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

A 25-year-old woman was brutally murdered and skinned in Mexico

மெக்சிகோ நாட்டை சேர்ந்த எரிக் பிரான்ஸிஸ்கோ ரோப்லெடோ(46), இவருக்கும் இவரது 25 வயதுடைய  2-வது மனைவி இங்கிரிட் எஸ்கமில்லாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று இதேபோல சண்டை ஏற்பட ஆத்திரத்தில் எரிக் கத்தியை எடுத்து மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். பின்னரும் ஆத்திரம் தீராத அவர் மனைவியின் தோலை தனியாக உரித்து எடுத்திருக்கிறார்.

தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தனியாக வெட்டி எடுத்து அருகில் இருந்த ஏரியில் கொண்டு வீசியிருக்கிறார். இதை தன்னுடைய முதல் மனைவிக்கும் அவர் போன் போட்டு விலாவரியாக சொல்லி இருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ந்து போன அவரது முதல் மனைவி போலீசுக்கு கால் பண்ணி இதை, விரைந்து சென்ற போலீசார் மிச்சமிருந்த உடல் பாகங்களை கைப்பற்றி அவரை கைது செய்துள்ளனர்.

இதில் கொடுமை என்னெவென்றால் தோல் உரிக்கப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளில் பயன்படுத்தி இருக்கின்றன. இதற்கு மெக்சிகோவின் தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. அந்நாட்டு மக்களும் இதைப்பார்த்து கொதிப்படைந்து இருக்கின்றனர். எரிக்குக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையில் எஸ்கமில்லாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் உயிருடன் இருக்கும் எஸ்கமில்லாவின் அழகான புகைப்படங்களையும், அழகான இயற்கை காட்சிகளையும் பதிவிட்டு ஊடகங்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.