‘9 நாட்களாக அழுகிய நிலையில் கிடந்த’... ‘ஒட்டுமொத்த குடும்பம்’... ‘ஒரே நாளில் நிலைகுலைய செய்த சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Feb 14, 2020 12:18 AM

3 குழந்தைகள் உள்பட ஒரு குடும்பமே 9 நாட்களாக மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவத்தில், அவர்களது உறவினரான இளைஞரே இரும்பு ராடால் அடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Five including Three Children Dead bodies in Bhajanpura

பீகாரைச் சேர்ந்த சேர்ந்தவர் ஷம்பூநாத் சவுத்திரி (43). இவரது மனைவி சுனிதா(37), மகன்கள் சிவம் (17), சச்சின் (14) மற்றும் மகள் கோமல் (12) ஆகியோருடன், பிழைப்புக்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் டெல்லி பஜன்பூராவில், சைடு போர்ஷனில் வாடகைக்கு குடியேறியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஷம்பூநாத் வீடு பூட்டியே காணப்பட்டநிலையில், அவர்களது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்த காட்சி அவர்களை அதிரவைத்துள்ளது. ஏனெனில் உடல் அழுகிய நிலையில் 3 குழந்தைகள் உள்பட தம்பதி சடலமாக வெவ்வேறு அறைகளில் கிடந்துள்ளனர். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அவர்களது உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அக்கம்பக்கம் மற்றும உறவினர்களிடம் விசாரித்ததில், பணப் பிரச்சனையோ அல்லது குடும்ப பிரச்சனையோ அவர்களுக்குள் இருந்தது இல்லை என்றும், மிகவும் மகிழ்ச்சியான குடும்பம் என்றும் தெரிவித்திருந்தனர்.

மேலும் ஷம்புநாத்தின் மகள் கோமல் கடந்த 3-ம் தேதிக்குப் பிறகு, பள்ளிக்கு வரவில்லை என அவளுடன் படிக்கும், தனது மகள் கூறியதாக அங்கிருந்த பக்கத்து வீட்டுப் பெண் கூறியதும், இது தற்கொலைக்கு வாய்ப்பில்லை என்று போலீசார் சந்தேகித்தனர். இந்த க்ளூவை வைத்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து, பின்னர் சந்தேகத்தின் பேரில், ஷம்புநாத்தின் தாய்மாமன் உறவான 28 வயது இளைஞர் பிரபு மிஸ்ராவைப் பிடித்து விசாரித்ததில், அவர் 5 பேரையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். ஷம்புநாத்திடம் இருந்து இளைஞர் பிரபு 30,000 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.

இதனை ஷம்புநாத் திரும்பி கேட்க இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த பிரபு கடந்த 3-ம் தேதி ஷம்புநாத்தின் மனைவி சுனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இரும்பு ராடால் அவரை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் பள்ளியிலிருந்து திரும்பிய ஷம்புநாத்தின் மகள் கோமல், மகன்கள் இருவர் என அரை மணிநேரத்தில் 4 பேரையும் அடித்துக் கொன்றுள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு வந்த ஷம்புநாத்தையும் கொலை செய்துவிட்டு பிரபு தப்பியோடியுள்ளார். 9 நாட்களாக 5 பேர் உடலும் வீட்டிலேயே கிடந்துள்ளது. யார் வம்புக்கும் போகாமல் மிகவும் சந்தோஷமாக இருந்த குடும்பம் இப்படி நிலைகுலைந்து போயுள்ளது அங்கு இருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #MURDER #CRIME #HUSBANDANDWIFE