அவ உனக்கு 'தங்கச்சி' வேணும், இப்டி பண்ணாத... 'கண்டித்த' அண்ணன்... கடைசியில் நடந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 13, 2020 11:24 PM

முறைதவறிய காதலால் கோவை கிணத்துக்கடவு பகுதியில் இளைஞரை ஆட்டோ டிரைவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Youth Killed Near Coimbatore Police arrested one person

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்(22) அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (18) என்பவரது தங்கையை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்றாலும், சகோதரர் முறை என்பதால் இந்த காதலை விட்டுவிடுமாறு மணிகண்டன், தினேஷ்குமாரை கண்டித்து இருக்கிறார்.

ஆனால் தினேஷ்குமார, மணிகண்டன் அறிவுரையை ஏற்கவில்லை. சமீபத்தில் பழனிக்கு இரு குடும்பத்தினரும் பாதயாத்திரை சென்றபோது தினேஷ்குமார், மணிகண்டனின் தங்கைக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். இதைப்பார்த்து மணிகண்டன் மீண்டும் தினேஷை கண்டித்து இருக்கிறார். ஆனால் அவர் கேட்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன், தினேஷை வெளியில் அழைத்துச்சென்று மீண்டும் இதுதொடர்பாக பேசியிருக்கிறார். இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தினேஷை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளிக்க விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தினேஷை ஆம்புலன்சில் ஏற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.