‘மனைவியை கொலை பண்ணிட்டேன்’.. ‘நானும் தற்கொலை பண்ணப்போறேன்’.. மாமனாரை மிரளவைத்த ‘போன்கால்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 25, 2020 11:56 AM

பெற்ற குழந்தைகள் கண் முன்னால் மனைவியை தலைகாணியால் அமுக்கி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man kills wife Leaves home after telling kin he will end life

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் சேகர்வானி. இவரது மனைவி சப்னா சேகர்வானி. அரவிந்த் சேகர்வானி அவரது மாமனாருக்கு போன் செய்து ‘என் மனைவியை கொலை செய்துவிட்டேன், நானும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்’ என தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், இறந்து கிடந்த சப்னா சேகர்வானியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனது 5 வயது பெண் குழந்தை, 8 மாத ஆண்குழந்தையின் கண்முன்னே தனது மனைவியை தலைகணையால் அமுக்கி அரவிந்த் கொலை செய்தது தெரியவந்துள்ளது. தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியை அரவிந்த் கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள அரவிந்த் சேகர்வானியை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #HUSBANDANDWIFE