‘16 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட’.. ‘7 வயது சிறுமிக்கு நேர்ந்த நெஞ்சை உருக்கும் சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 14, 2020 04:13 PM

திண்டிவனத்தில் 7 வயதுள்ள சிறுமி 17 பேரால் வெவ்வேறு நேரங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

7 year old minor girl, sexual abused victim dead in chennai

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது கணவரை பிரிந்து, தனது 9 வயது மற்றும் 7 வயது மகள்களை வளர்ப்பதற்காக புதுச்சேரி சென்று தங்கி வாழ்ந்து வந்தார். அதுவரை அவருடைய இரண்டு குழந்தைகளும் விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்துக் கொண்டு வந்திருந்தனர்.  அப்போதுதான் அப்பெண்ணுக்கு புதுச்சேரியில் வேறு ஒரு நபருடன் உறவு உண்டானது.  தனது இரண்டு பெண் குழந்தைகளையும் ஏற்றுக்கொண்டால் அவரை திருமணம் செய்து கொள்வதாக, சிறுமிகளின் தாய் கூற அந்த நபரும் சம்மதித்தார். இதனையடுத்து அந்த நபருடன், சிறுமிகளின் தாய் புதுச்சேரியில் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து அவருடைய இரண்டு குழந்தைகளும் புதுச்சேரியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். அப்போது மூத்த மகள் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்தார். அவரை பள்ளி நிர்வாகம் விசாரித்தபோது இரண்டு குழந்தைகளுமே தாங்கள் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி கூறினர்.  இதை வைத்து விழுப்புரம் குழந்தைகள் நல குழுவும், புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவும், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி காவல் துறையினரும் இணைந்து விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு பிரம்மதேசம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்த போதிலும் கடந்த தீபாவளி சமயத்தில் அவர்கள் ஜாமீனில் வெளிவந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் விசாரணை நடந்து கொண்டிருந்த சூழலில் தன்னுடைய 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு குழந்தைகளின் தாய் சென்னைக்கு குடியேறினார். இந்த நிலையில்தான் இரண்டாவது குழந்தையான 7 வயது மகளுக்கு நேற்று இரவு திடீரென வாந்தி ஏற்பட்டது. உடனே குழந்தையை அவசர அவசரமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் குழந்தையின் தாய்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியில்யே இறந்து விட்டதாக தெரிவிக்க, அதைக்கேட்டு குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு மற்ற விவரங்களை கூற வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ள நிலையில், 16 பேர் வெவ்வேறு நேரங்களில் செய்த பாலியல் வன்கொடுமையே இக்குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தைகளின் நலன் கருதியே குழந்தையின் தாய் சென்னை வந்து தங்கியதாகவும், மேலும் அப்பெண்ணின் மூத்த மகளுக்கும் இதே மாதிரி கொடுமை நடந்துள்ளதால், அவளுக்கு என்ன ஆகுமோ என்கிற பயத்தில் குழந்தையின் தாய் உள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #CHILD #MOTHER