3 செல்போன் வைத்து ‘ரகசிய வீடியோ’.. ‘நள்ளிரவு வீட்டுக்குள் கேட்ட சத்தம்’.. பகீர் கிளப்பிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 17, 2020 02:16 PM

தூத்துக்குடி அருகே பக்கத்துவீட்டு இளைஞருடன் தனிமையில் இருந்த மனைவி பார்த்து ஆத்திரமடைந்த கணவர் இருவரையும் வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband murdered wife for illegal affair with youth in Tuticorin

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரம் அடுத்த புங்கவர்நத்தம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (58). இவரது மனைவி மாரியம்மாள் (45). இந்த தம்பதிக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். மேளக்கலைஞரான சண்முகம் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் சென்று வந்துள்ளார். சண்முகத்தின் எதிர்வீட்டில் வசித்து வந்தவர் ராமமூர்த்தி (28). இவர் ஊராட்சி மன்றத்தில் தண்ணீர் திறந்து விடும் வேலை பார்த்து வந்துள்ளார். அது தவிர கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்தநிலையில் சண்முகத்தின் மனைவி மாரியம்மாளுக்கும், ராமமூர்த்திக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரையும் சண்முகம் கண்டித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் இருவரும் உறவில் இருந்துள்ளனர். இந்த பிரச்சனை கிராம பஞ்சாயத்து வரை சென்றுள்ளது. அங்கு ராமமூர்த்தி நல்லவர் என்றும், தனது கணவர் தன்மீது வீண்பழி சுமத்துவதாகவும் மாரியம்மாள் தெரிவித்துள்ளார். இதனால் கிராமத்தினர் சண்முகத்தை சத்தம் போட்டு அனுப்பியுள்ளனர்.

இதனை அடுத்து வேலை விஷயமாக சென்னை வந்த சண்முகம் நண்பர்களின் உதவியுடன் 3 செல்போன்களை வாங்கி வந்துள்ளார். இதை வீட்டுக்குள் பல இடங்களில் மறைத்து வைத்து வீடியோவாக பதிவு செய்துள்ளார். சம்பவத்தன்று சண்முகம் மதுகுடித்துவிட்டு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு வீட்டுக்குள் வேற்று மனிதரின் சத்தம்கேட்டு சண்முகம் எழுந்துள்ளார்.

அப்போது வீட்டின் அறை ஒன்றில் மாரியம்மாளும், ராமமூர்த்தியும் தனிமையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அரிவாளை எடுத்து ராமமூர்த்தியை வெட்டியுள்ளார். இதில் அவரது தலை துண்டானது. பயத்தில் உறைந்து போயிருந்த மனைவியையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் இருவரும் படுகாயமடைந்து பலியாகினர். பின்னர் வீட்டில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் நடந்தே சென்று பசுவந்தனை காவல் நிலையத்தில் சண்முகம் சரணடைந்துள்ளார். ரத்தக் கறைகளுடன் வந்த அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இவை அனைத்தும் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சண்முகத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞருடன் மனைவி தனிமையில் இருந்ததைப் பார்த்த கணவர் ஆத்திரத்தில் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #TUTICORIN #HUSBANDANDWIFE #ILLEGALAFFAIR